(மன்னார் நிருபர்)
(27-02-2023)
மன்னார் பிரதேசச் செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில்,பிரதேச மட்ட சிறு கண்காட்சி மற்றும் விற்பனை ஒவ்வொரு மாதமும் கடைசி திங்கட்கிழமை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
-மன்னார் நகர சபையின் உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் குறித்த கண்காட்சி மற்றும் விற்பனை ஒவ்வொரு மாதமும் கடைசி திங்கட்கிழமை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன் காணப்படும் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வாராந்த சந்தை கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-இன்றைய தினம் திங்கட்கிழமை(27)பிரதேச மட்ட சிறு கண்காட்சி மற்றும் விற்பனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மக்கள் எமது உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் உற்பத்திகளை பார்வையிட்டு கொள்வனவு செய்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை(27) காலை பிரதேச மட்ட சிறு கண்காட்சி மற்றும் விற்பனை யை ஆரம்பித்து வைத்த பின் அவர் அவ்வாறு தெரிவித்தார்.