ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்
09-03-2023 , விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யுமாறு கோரி புலோலி கமநல சேவைகள் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான மண்ணெண்ணெய், செயற்கை உரம், கிருமிநாசினி மற்றும் உள்ளீட்டு பொருட்களை வழங்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு புனர்வாழ்வு அமைப்பும் விவசாயிகளும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு, மண்ணெண்ணெய் கொள்கலன்களை முன்னே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.