ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் நல்ல ஊதியம் பெறும் தொழிலுக்கு தயார்படுத்த முன்வந்துள்ளது
ஒன்றாரியோ மாகாண முதல்வர் தெரிவிப்பு
கனடாவின் ஒன்ராறியோ அரசாங்கம் 11 ஆம் வகுப்பு மாணவர்களை முழுநேர, திறமையான தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் அவர்களை தொழிலின் அவசியம் மற்றும் நல்ல ஊதியம் பெறும் தொழிலுக்கு தயார்படுத்தும் வகையில் உதவ முன்வந்துள்ளது. தொழிற்பயிற்சிக்கான சான்றிதழைப் பெற்றவுடன், இந்த இளம் தொழிலாளர்கள் முதிர்ந்த மாணவர்களாக தங்கள் ஒன்றாரியோ மேல்நிலைப் பாடசாலை டிப்ளோமாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாகாணம் வரலாற்றில் இல்லாத வகையில் தொழிலாளர் பற்றாக்குறையை தொடர்ந்து எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த மாற்றத்தின் அர்த்தம், ஒன்ராறியோவைக் கட்டியெழுப்புவதற்கு முன்பை விட அதிகமான மாணவர்கள் தொழிற்சந்தையில் வேகமாக நுழைய முடியும்.
இவ்வாறு தெரிவித்தார் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக்போர்ட் அவர்கள். ரொறன்ரோ மாநகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இந்த மாற்றங்கள் மாணவர்களுக்கு நல்ல ஊதியம் தரும் வேலைகள் மற்றும் பலனளிக்கும் தொழில்களுக்கு உற்சாகமான பாதைகளை திறப்பதற்கு உதவம் வகையில் ஆரம்பிக்கப்படுகின்றன, மேலும் தொழிற்சந்தையில் திறமையானவர்ளான அதிக இளைஞர்களை ஈர்ப்பதற்காக எங்கள் அரசாங்கத்தின் தற்போதைய பணியை ஆரம்பித்துள்ளோம் ” என்று ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் கூறினார். அவர் மேலம் தெரிவிக்கையில் “எங்கள் மாகாணப் பாடசாலைகளில் வர்த்தகக் கல்வியை மேம்படுத்துவது, புதியவர்களுக்கான தடைகளைத் தகர்ப்பது அல்லது தொழிலாளர்களை மேம்படுத்துவது எதுவாக இருந்தாலும், ஒன்ராறியோவைக் கட்டமைக்கும் திறமையான பணியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் பின் நிற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய முதல்வர் ‘ கட்டுமானத் துறையில் மட்டும், 2027ஆம் ஆண்டுக்குள் 72,000 புதிய தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறவுள்ளார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் தொழில் வளர்ச்சியின் காரணமாக நாம் திறந்த கொள்கைகளுடன் இயங்கவேண்டும். அதனால் மட்டுமே தொழிலாளர்வெற்றிடங்களை நிரப்ப முடியும். 2031க்குள் 1.5 மில்லியன் வீடுகளைக் கட்டுவது உட்பட, மாகாணத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களை வழங்க, திறமையான தொழில் நு\ணுக்கங்கள் கொண்ட அதிக வேலையாட்கள் தேவைப்படுகிறார்கள்.
தொழிலாளர், குடிவரவு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் Monte McNaughton, அங்கு உரையாற்றுகையில் “பல்கலைக்கழகத்திற்குச் செல்வதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்று நீண்ட காலமாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கூறப்பட்டு வருகிறது. “நீங்கள் திறமையான ஒரு துறையில் ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு வாழ்க்கைக்கான ஒரு தொழில் இருக்கும். எங்கள் அரசாங்கம் மாணவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதற்குத் தேவையான தொழில்களையும் அதற்கான கருவிகளை தொடர்ந்து வழங்கும்” என்றார்
அவர் மேலும் தெரிவிக்கையில் மேலும் எமது அரசாங்கம் 2023 ஆண்டு இலையுதிர்காலத்தில் முதலாளிகள், தொழிற்சங்கங்கள், கல்வி பங்குதாரர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பிறருடன் இளைஞர்கள் தொழில்துறைகளில் ஈடுபடுவதை எளிதாக்குவதற்கான வழிகள் குறித்து ஆலோசனைகளை ஆரம்பித்தோம். . தற்போது தரம் 12-நிலைக் கல்வி தேவைப்படும் 106 திறமையான தொழில் துறைகளில் சிலவற்றிற்கான நுழைவுத் தகைமைகளை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இதில் அடங்கும். என்றார்
அங்கு உரையாற்றி ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அ மைச்சர் ஸ்ரிபன் லெட்சே அவர்கள் தனது உரையில் “இந்த மாகாணத்தில் அனைத்து மாணவர்களும் முன்னேறுவதை உறுதி செய்வதற்காக, நாங்கள் உயர்நிலைப் பாடசாலை முதல் தொழில் பயிற்சிக் கற்றல் வரையிலான பாதைகளை விரைவுபடுத்துகிறோம், இறுதியில் திறமையான தொழில்களில் ஒரு தொழிலை உருவாக்குகிறோம்,” என்று கூறினார். ” தொழில் சார்ந்த திறன்களை நிரப்புவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கம். ஒன்ராறியோ மாணவர்களை இந்த நல்ல சம்பளம் தரும் வேலைகளுடன் இணைத்து, பட்டம் பெறாத பல மாணவர்களுக்கு உதவுவதன் மூலம், இப்போது அவர்களை அர்த்தமுள்ள வேலைவாய்ப்பிற்கு இட்டுச் செல்லும் நற்சான்றிதழைப் பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் தொழில் வல்லுனர்களாகவும் வர்த்தகம் செய்பவர்களாகவும் விளங்குவார்கள் என்றார்
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டதாகும்