ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக இயங்கிவரும் கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது.
ஈறறொபிக்கோ நகரில் கிப்ளிங் நகர சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
சிறுவர் சிறுமியர்கள் மற்றும் மூத்தோர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன.
சிறப்பு விருந்தினராக பவதாரணியின் பாரதி கலைக்கூடத்தின் நிறுவனரும் அதிபருமான மதிவாசன் சீனிவாசகம் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார். அத்துடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த பலருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் அங்கு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வசந்தா றோஹினிதேவி கருப்பையா தனது தொண்டர்களோடு சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்
The Chief Guest of this International Women;’s Day Celebration was Councilor Vincent Crisanti from Ward-1 Etobicoke and he delivered his speech.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பட்டவையாகும்.
(செய்தியும் படங்களும்:- சத்தியன்)