ராயல் சேலஞ்சர்ஸ் பிரபலமான வீரர்கள் இருந்தும். 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் ஒரு அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ். விராட்கோலி மேக்ஸ்வெல் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், தினேஷ் கார்த்திக் பின் ஆலென், ஹேசில்வுட், முகமது சிராஜ் பிரேஸ்வெல், ஹசாங்கா ஷடால் அகமது. ரிஸ் டாப்லே. ஹர்ஷல் பட்டேல் என்று தரமான வீரர்கள் இருப்பதால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற நோக்கில் உள்ளது.
கடந்த ஆண்டு லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்து 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் 2வது முறையாக களமிறங்குகிறது ஆர்சிபி. இந்தாண்டு பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அவினாஷ் சிங் மீதும் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காயத்தில் இருந்து ஹேசில்வுட் முழுமையாக குணம் அடையாததால் ஐபிஎல் தொடர்முழுவதும் பங்கேற்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் தொடர் ஆகியவற்றில் ஜோஷ் ஹேசில்வுட் கவனம் செலுத்தக்கூடும். கடந்த சீசனில் ஆர்.சி.பி அணியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த ரஜத் பட்டிதார் காயம் காரணமாக இந்த தொடரில் பாதி வரை பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆர் சி பி அணி கலக்கத்தில் இருக்கிறது.
ஆர் சி பி அணியின் தொடக்க ஜோடியாக டுப்ளிசிஸும், விராட் கோலியும் இருந்து வந்தனர். தற்போது நடு வரிசையில் ஆள் இல்லை என்பதால் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். டுபிளசிஸ்க்கு தொடக்க வீரராக பின் ஆலன் என்ற நியூஸிலாந்து வீரர் சேர்க்கப்பட்டால் மூன்றாவது வெளிநாட்டு வீரராக டேவிட் வில்லி மற்றும் நான்காவது வெளிநாட்டு வீரர்களாக ஹசரங்காவை பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலககோப்பை அணிக்கு இடம் பிடிக்கும் அளவுக்கு விளையாடி அசத்தியிருந்தார். அதே ஃபார்மை இந்த தொடரிலும் அவர் வெளிப்படுத்தினால் ஆர்சிபி அணி பேட்டிங்கில் பலம் கிடைக்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், முகமது சிராஜ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ்.