ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 204 ரன்கள் குவித்துள்ளது. குஜராத் அணியின் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 63 ரன்களை அதிரடியாக சேர்த்தார். இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களத்தில் இறங்கினர். ரிதிமன் சாஹா 17 ரன்னும் கில் 39 ரன்னும் எடுத்து வெளியேற அடுத்து வந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருடன் அபினவ் மனோகர் பார்ட்னர்ஷிப் அமைக்க குஜராத் அணியின் ரன் குவிப்பு வேகம் எடுத்தார்.
அபினவ் மனோகர் 14 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விஜய் சங்கர் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சாய் சுதர்சன் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5 சிக்சர் 4 பவுண்டரியுடன் விஜய் சங்கர் 63 ரன்கள் குவிக்க குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து 205 ரக்ள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.