இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக, அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் நினைவுகளோடு அதன் 14 வது ஆண்டுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்கின்றோம்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை செய்திருக்கின்றது சிறிலங்கா அரச பயங்கரவாதம்.
கொடியபோர் முடிவடைந்து 14ஆண்டுகள் கடந்தும், நீதிக்காக எமது மக்கள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியான இனவழிப்பு போர் முடிவடைந்து, மறைமுகமான இனவழிப்பு போராக தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் வெவ்வேறு வழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அன்பான உறவுகளே,
எமது மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு இதுவரை நாளும் பரிகார நீதி கிடைக்காத நிலையில், மிகுந்த சலிப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ள நிலையில், எமது விடுதலைப் போராட்டத்தோடு பயணித்து மரணித்துப்போன எமது மக்களையும் எமது மாவீரர்களையும் நினைவுபடுத்திக்கொள்வோம்.
மெல்பேர்ணில் எதிர்வரும் 18-05-2023 வியாழக்கிழமை அன்று நினைவேந்தல் நாள் நிகழ்வு நடைபெறுகின்றது.
நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152
காலம்: 18-05-2023 Thursday from 7 pm – 8.30 pm
மேலதிக விபரங்களிற்கு 0433002619 அல்லது 0452205399 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இறுதி யுத்தகாலப்பகுதியில் பொதுமக்களை பட்டினிச்சாவிலிருந்து பாதுகாத்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட கஞ்சியை நினைவூட்டும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படும்.
நினைவேந்தல் நாளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்ரோரியா
ஓஸ்திரேலியா, நியூசிலாந்தின் 8 பெருநகரங்களில் 2023 நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்
ADELAIDE _அடெலெயிட்:
நிகழ்விடம்: Rossini Function Centre, 49 Gorge Rd, Paradise SA 5075
நேரம்: 06.30pm – 8pm
தொடர்பு: 0405 711 184, 0469 059 281, 0470 310 350
BRISBANE – பிரிஸ்பேன்:
நிகழ்விடம்: Kelmscott Hall, 60 River Rd, Kelmscott WA 6111
நேரம்: 6.30pm
தொடர்பு: 0469 601 466, 0470 169 692
CANBERRA – கான்பரா:
நிகழ்விடம்: Hughes Community Centre, 2 Wisdom St, Hughes ACT 2605
நேரம்: 6.30pm
தொடர்பு: 0413 926 360
MELBOURNE – மெல்பேர்ண்:
நிகழ்விடம்: Hungarian Community Centre, 760 Boronia Rd, Wantirna VIC 3152
நேரம்: 7pm – 8.30pm
தொடர்பு: 0433 002 619, 0452 205 399
PERTH (பேர்த்):
நிகழ்விடம்: Maddington Community Centre, 19 Alcock St, Maddington WA 6109
நேரம்: 07.05pm
தொடர்பு: 0421 514 004, 0469 823 269
SYDNEY (சிட்னி):
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW 2145
நேரம்: 06.30pm
தொடர்பு: 0470 274 539
TASMANIA – (தாஸ்மேனியா):
நிகழ்விடம்: 35 Redwood Road, Kingston TAS 7050
நேரம்: 6.45pm – 7.45pm
தொடர்பு: 0406 655 571
NZ – AUCKLAND – (ஒக்லாண்ட்):
நிகழ்விடம்: Fickling Convention Centre, 546 Mount Albert Road, Three Kings, Auckland 1042
நேரம்: 6.30pm
எமது உறவுகளை மனத்தில் நிறுத்தி இணைந்து கொள்வோம் – அவர் தம்மை
நினைவு கூர்வோம்.
TCC Australia’s & NZ All states Event Details in LINK:- https://www.tccau.com/2023/05/
Event Youtube Link: https://www.youtube.com/