யாழ்ப்பாணம் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் பழைய மாணவரும் அணு விஞ்ஞானியும் பேராசிரியரும் தொழிலதிபரும் கனடிய அரசியல் செயற்பாட்டாளருமான கனடா வாழ் கலாநிதி வே. இலகுப்பிள்ளை அவர்களின் ‘அணுவைத் துளைத்து’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. விழாவிற்கு ஓய்வு பெற்ற அதிபர் சின்னையா சிவனேசன் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
மேலதிக விபரங்களுக்கு இத்துடன் காணப்படும் அறிவித்தலைப் பார்க்கவும்