“நாங்கள் ஏனைய நிலையில் உள்ள அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், ஆனால் அரசாங்களுக்காக வேலை செய்யத் தேவையில்லை”
ரொறன்ரோ மேயர் தேர்தல் வேட்பாளர் மிட்சி ஹண்டர் தெரிவிப்பு
ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் பதவிக்காக நாம் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களில் சிலர் ஒன்றாரியோ மாகாண அரசின் வேலைத் திட்டங்களுக்கு அல்லது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வேலை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால். மேயர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் ஒருவர் கனடாவில் உள்ள ஏனைய நிலை அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இது ஆரோக்கியமான விடயமாகும். ஆனால் அந்த அரசாங்களுக்காக வேலை செய்யத் தேவையே இல்லை.
இவ்வாறு நேற்று முன்தினம் புதன் கிழமை ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற ரொறன்ரோ மாநகர சபைக்கான மேயர் பதவிக்கு போட்டியிடுகின்ற முக்கிய வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் ஒன்றாரியோ லிபரல் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரும் சமூகச் செயற்பாட்டாளருமான மிட்சி ஹன்றர் அவர்கள் தெரிவித்தார்.
ஆறு முக்கிய டொராண்டோ மேயர் வேட்பாளர்கள் புதன்கிழமை நடைபெற்ற வி;வாதத்தில் தங்கள் உரை நேரத்தில் ஸ்காபரோவில் போக்குவரத்து, நகர சேவைகள் மற்றும் வரிகளின் எதிர்காலம் ஆகியவை தொடர்பாக தங்கள் பார்வைகளை கோடிட்டுக் காட்டியுள்ளனர், ரொறன்ரோ நகரின் கிழக்கு முனையாகக் கருதப்படும் ஸ்காபுறோவில் நடைபெற்ற மேற்படி விவாதம் இந்த மேயர் தேர்தலில் முக்கிய விடயமக கருதப்படுகின்றது. ஸ்காபுறோ பிராந்தியம் என்பது நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு முக்கிய போர்க்களமாக காணப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு வேட்பாளரும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், பலதரப்பட்ட, மக்கள்தொகை கொண்ட மாவட்டத்தில், நலிவடைந்து வரும் நகர சேவைகள் மற்றும் போக்குவரத்து மற்றும் அண்டை மையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை புத்துயிர் அளிப்பதில் கவனம் செலுத்துவதாக அங்கு உரையாற்றினார்கள்.
வேட்பாளர்களில் ஒருவரான சோவும் சக முற்போக்குவாதியான மேட்லோவும், நொறுங்கி வரும் நகர சேவைகளை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான வரிகள் குறித்து ரொறன்ரோ மக்களின் கருத்துக்களை வேட்பாளர்கள் நேர்மையாக செவிமடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
அன்றைய மேயர் வேட்பாளர்கள் விவாதத்தில் வேட்பாளர்கள் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டுடன் எவ்வாறு பணியாற்றுவது அல்லது அவரது நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்யப் போகின்றீர்களா போன்ற கேள்விகளையும் எதிர்கொண்டனர்.
முன்னாள் பொலிஸ் தலைமை அதிகாரி சாண்டர்ஸ் மற்றும் பெய்லாவோ ஆகியோர் அவர்கள் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட்; அவர்களுடன் கொண்டுள்ள நேரடித் தொடர்புகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டனர், அதே சமயம் முற்போக்குவாதிகளான மாட்லோ, சௌ மற்றும் மிட்சி ஹண்டர் ஆகியோர், ஒன்றாரியோ முதல்வருடன் இணைந்து பணியாற்றுவதற்கான அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
ஒரு “இடதுசாரி ” மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ரொறன்ரோ நகரமானது நசுங்கிவிடும் என்ற மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளதாக அறியப்படும் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து பல வாக்காளர்கள் கேள்விகளை எழுப்பினர் தொடர்ந்து ஒன்றாரியோ முதல்வரின் சிந்தனைகளை ஆதரிப்பவராக அறியப்பட்ட சாண்டர்ஸ் அவர்களுக்கு எதிராக வேட்பாளர்கள் சிலர் கருத்துக்களைப் பகிர்ந்தார்கள்.
இந்த மேயர் வேட்பாளர்களுக்கிடையிலான விவாதத்திற்கு பல உள்ளூர் சமூக வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஆதரவை வழங்கியிருந்தன. அவற்றுள் அதிகளவில் தமிழ் பேசும் அன்பரிகளின் வர்த்தக நிறுவனங்கள் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது..அவர்களில் தமிழர்களின் நிர்வாகத்தில் இயங்கும் சரவணபவன் உணவகம்.- திரு கணேசன் சுகுமார். நெட்வின் நிறுவனம்- குலா செல்லத்துரை. காப்புறுதித் துறை -அஜித் சபாரத்தினம் ஜே.சி. எஸ் பேங்குவற் நிறுவனம்- யூட் மற்றும் தமிழ் வண் தொலைக்காட்சி. மோட்கேஜ் முகவர்- மைக் அகிலன் ஆகியோர் அடங்கியிருந்தார்கள்.
ஸ்காபரோவில் வேட்பாளர்கள் பிரச்சார அலுவலகத்தைத் திறந்து, உள்ளூர் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறவிரும்பும் வேட்பாளர்கள் மாகாண அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே வேலை செய்வார்கள் என்பது தொடர்பாக சபையோர் கண்டனங்களைத் தெரிவித்தனர்..