பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்துநில் வஜிர குமார எனும் குற்றவாளி ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.