62 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சாரத சமரகோனது வழிக்காட்டலின் கீழ் ஹலம்பாவெவயில் அமைந்துள்ள 622 காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை புதிய கொம்பட் சைக்கிள் தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சியின் நோக்கம் என்ன வென்றால் குறைந்த பட்சம் கிடைக்கக்கூடிய வளங்களை பயண்படுத்தி பாதுகாப்பு பொறிமுறையை மேம்படுத்துவதாகும். இந்த பயிற்சியில் 62 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 11 ஆவது கெமுனு காலாட் படையணி, 9 ஆவது கஜபா படையணி, 20 கஜபா படையணி, 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 17 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 35 அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.
இந்த பயிற்சிகள் 623 ஆவது காலாட் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரபாத் கொடிதுவக்குவின் கண்காணிப்பின் கீழ் 2 ஆவது விஷேட படையணியைச் சேர்ந்த பயிற்சிவிப்பாளர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க வருகை தந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் உரை நிகழ்த்தும் போது 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பயிற்சிக்கு தனது வாழ்த்துக்களை 62 ஆவது படைத் தளபதிக்கு தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.