ஆட்கள் எவருமின்றி இலங்கை மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இந்திய வள்ளம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இயந்திரம் பொருத்தப்பட்ட ‘ஜோசப் இம்மானுவேல்’ எனும் பெயர் குறிப்பிடப்பட்ட வள்ளமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய வள்ளத்தை அப்பகுதி மீனவர்கள் கரையில் இழுத்து வைத்ததுடன் தாழ்வுபாடு கடற்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
தாழ்வுப்பாடு கடற்படை மற்றும் கடற்றொழில் தினைக்கள அதிகாரிகள் கரை ஒதுங்கிய வள்ளத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த வள்ளத்தை பாதுகாப்பிற்காக தாழ்வுபாடு கடற்படை எல்லைக்கு மீனவர்களின் உதவியுடன் கொண்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கடற்படை மற்றும் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.