நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ள கனடிய மற்றும் அமெரிக்க சுகாதார அமைப்புக்கள்
கனடா அல்பேர்ட்டா மாகாணத்தில் கடந்த சில மாதங்களாகத் தொடரும் காட்டுத் தீயின் மோசமான பரவலால் கனடா அமெரிக்காவின் சில பகுதிகளில் வளிமண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மக்கள் நன்கு உணரக்கூடியதாக இருப்பதாகவும் இதனால் இரண்டு நாடுகளில் சில நகரங்களில்நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ள கனடிய மற்றும் அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் மக்களை கவனமாக இருக்கும் வண்ணம் கேட்டுள்ளன.
மேற்கு கனேடிய மாகாணமான அல்பர்ட்டா முழுவதும் காட்டுத் தீயில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஏக்கர் பயிர் விளையும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் மற்றும் இந்த வார இறுதியில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் எண்ணெய் உற்பத்தி கூட அல்பேர்ட்டா மாகாணத்தில் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கனடிய மத்திய இயற்கை அழிவுகள் தொடர்பான அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் மாகாணமாகத் திகழும் அல்பேர்ட்டா, தீ விபத்துகளுக்கு மத்தியில் 145,000 பீப்பாய்களுக்கு சமமான எண்ணெயின் உற்பத்தியை நிறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
கனடிய வன சேவையின் ஆராய்ச்சி விஞ்ஞானி மார்க்-ஆண்ட்ரே பாரிசியனின் கூற்றுப்படி, அண்மையில் ஆங்காங்கே மழை பொழிவுகள் இருந்ததால் தீயின் முன்னேற்றம் தடுக்கப்பட்டாலும் , . கூடுதலாக, இந்த வாரத்தின் இறுதியில் அதிக வெப்பமான, வறண்ட நிலைகளை அந்த பகுதிக்கு கொண்டு வரவும், தொடர்ந்து தீயை பரவலின் அபாயத்தையும் கொடுமையையும் மட்டுமே நாம் காண முடியும் என்று எச்சரித்துள்ளார்.
இதே கனடாவின் சில மாகாணங்களில் இடம்பெறும் மோசமான காட்டுத் தீ நிலைமைகள் காரணமாக அமெரிக்கா முழுவதும் விமானங்களை தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வட அமெரிக்காவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் மக்கள் மிகவும் மோசமான தரமற்ற காற்றின் பாதிப்புக்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் “பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை இது அப்பட்டமான நினைவூட்டுகின்றது” என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன்விவரித்தார்.