சட்டவிரோதமாக கடல்வழியாக நாட்டிற்குள் பிரவேசித்து வவுனியாவில் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் உடன் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் இந்த வேண்டுகோளை விசேட சுவரொட்டிகள் மூலம் விடுத்துள்ளனர்.
காய்ச்சல் , வரட்டு இருமல் , சளி , மூச்சுத் திணறல் இருக்கும் நபர்கள் கொரோனா தொற்றுடையவர்களாக இருக்கலாம் எனவும் எனவே அவர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் குறித்த சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களை தங்கவைத்தல் , பாதுகாப்பளித்தல், போக்குவரத்திற்காக உதவியளித்தல், மறைந்திருந்திருப்பதற்காக உதவி புரிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவித்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக 199 அல்லது 1933 அல்லது 011 2444480 அல்லது 011 2444481 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அல்லது 071 – 8558875 என்ற வட்சப் இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறு பொலிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகள் வவுனியா நகர் , புதிய பேருந்து நிலையம் போன்ற பல பொது இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.