இந்தியா – புது டில்லியில் கடந்த 18.06.2023 நடைபெற்ற பகிரங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை செல்வி தவராசா சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
குறித்த சுற்றுப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்ற செல்வி தவராசா சானுயாவை கொரவிப்பதற்காக இன்றைய தினம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் ராம் மகேஸ், கிளிநொச்சி மாகாதேவ ஆச்சிரமத்திற்கு சென்றிருந்தார்.
குறித்த மாணவியை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துடன், சாதனை மாணவிக்கு மதிப்பளித்தார்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் கலந்து கொண்டார்.