இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் மதுபோதையில் கடந்த தைமாதம் அட்டகாசம் புரிந்த வடக்கு மாகாணத்தை சேர்ந்த இரு வலயக் கல்வி பணிப்பாளர்கள் தொடர்பான விசாரணையை மூடி மறைக்கும் செயற்பாட்டில் வடமாகண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் செயற்பாட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இவ்வருட தொடக்கத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றிற்காக சென்றிருந்தனர்.
அவர்கள் இரத்மலானையில் உள்ள அரசை விடுதியில் தங்கிய நிலையில் அன்று இரவு போதை தலைக்கேறி அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் அயல் அறையில் இருந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இவர்களில் செயற்பாட்டால் அசௌகரியத்துக்குள்ளாகியிருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் அங்கு தங்கியிருந்த பிற மாகாணங்களைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள் வடமாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் வினாவப்பட்டது.
இதன் போது பதில் அளித்த பொதுச் சேவை ஆணைக்குழு, குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவரிடம் விடயங்களை கேட்டு அறியுமாறு பதில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வடமாகாண பிரதி பிரதம செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு குறித்த விடயம் இடம் பெற்றமையை உறுதிப்படுத்தியதுடன் விசாரணை முடியும் வரை குறித்த அதிகாரிகளை இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டாம் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சுக்கு குறித்த நபர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தகவல் அறியும் சட்டமூலத்தில் வினவப்பட்டது.
பதில் வழங்கிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் நளாயினி இன்பராஜ், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களால் குறித்தபடி அந்த தொடர்பில் ஆராயுமாறு தமக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக முறைப்பாட்டாளருக்கு பதில் வழங்கியுள்ளார்.
பிரதி பிரதம செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் இரு மாதங்களைக் கடந்தும் சிரேஷ்ட உதவி செயலாளர் நளாயினி இன்பராஜ் விசாரணைகள் மேற்கொள்ளாமல் இருட்டடிப்பு செய்து வருகிறார்.
வட மாகாண கல்வி அமைச்சில் 15 வருடங்களைக் கடந்தும் ஒரே இடத்தில் கடமையாற்றி வரும் சிரேஷ்ட உதவி செயலாளரான நளாயினி இன்பராஜ் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல முறை கேட்டு விசாரணைகளை உரிய முறையில் நடாத்த விடாமல் பல ஊழல்வாதிகளை காப்பாற்றியுள்ளாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வடக்கு கல்வி அமைச்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஊழல் மோசடிகள், நிர்வாக முறைகேடுகளுக்கு இவர்களைப் போன்ற அதிகாரிகள் இருக்கும் வரை தீர்வு கிடைக்கப் போவதில்லை என மக்கள் முணுமுணுக்கின்றனர்.
ஆகவே இரத்மலானை அரச தங்குமிட விடுதியில் மதுபோதையில் அட்டகாசம் புரிந்த வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர்கள் இருவர் மீது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் விட்டால் அவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.