யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் புதன்கிழமையன்று யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்டார்.
மேலும் பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்டுபிடிப்புக்கான நிதிஉதவிகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், உதவிப் பணிப்பாளர், சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி தனது விஜயத்தின்போது கனடியத் தூதுவர் பனை மரத்தின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் பயனுள்ள பல தயாரிப்புக்களைப் பார்த்து வியப்புடன் மேலும் கேட்டறிந்து கொண்டார். கனடிய அரசாங்கத்தின் பல உதவித் திட்டங்களினால் இலங்கையில் சிறுகைத் தொழில் செய்பவர்கள் பலர் பயனடைந்துள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது