சங்குப்பிட்டியில் இன்று பகல் 11.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரிப் பக்கத்தில் இருந்து பூநகரி நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீதே, எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் ஒரு முன்னாள் போராளி என்றும், அவர் ஒரு காலை இழந்தவர் என்றும், செயற்கை கால் பொருத்தியிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.