யூலை இனக் கலவரத்தின் 40வது நினைவேந்தலில் இனவாதம் எனும் கொடும்பாவி நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் எரிக்கப்பட்டது.
முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் தூபியிலிருந்து தீப்பந்தம் ஏந்திய வாறு ஆரம்பமான நினைவேந்தல், நெல்லியடி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் சென்றடைந்து அங்கு இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு
வேண்டாம் வேண்டாம் இனவாதம் வேண்டாம், தீர்வு வேண்டும் தீர்வு வேண்டும் தமிழருக்கு தீர்வு வேண்டிம் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.