மன்னார் நிருபர்.
(02-08-2023)
மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் (இன்று புதன் மாலை ) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
கரை ஒதுங்கிய சடலத்தில் நீல நிற சாரம் அரை காற்சட்டை மற்றும் கருப்பு நிற டி ஷர்ட் அணிந்த நிலையில் காணப்படுகின்றது.
இதுவரை சடலம் மீட்கப்படவில்லை.
இராணுவம் மற்றும் போலீசார் அப்பகுதியில் சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.