பு. கஜிந்தன்
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இந்தச் சம்பவமானது நேற்று வியாழன் மாலை வேளை இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இராமலிங்கம் வசந்தகுமார் (வயது 42) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.