மாணவனை பழிவாங்க துடிக்கும் கஜேந்திரன் – யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு ஆசிரியரா?
ஆசிரியர் பதவி என்பது மாணவர்களுக்கு கல்வியை புகட்டுவதற்கும் அப்பால் நல்ல பழக்கவழக்கங்களை மாணவர்களிடத்தே வளர்க்க கூடிய ஒரு புனிதமான பதவியாக காணப்படுகிறது. ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்போது சில ஆசிரியர்களின் அடாவடிகள் என்பது போர்ச் சூழலில் தமிழ் மக்கள் மீது இராணுவம் மேற்கொண்ட அடாவடிகளுக்கு ஒப்பாக மாறியுள்ளது.
அப்படி தான் யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலும் இடம்பெற்றுள்ளது.
மாணவன் ஒருவனை பழி வாங்குவதற்கு கஜேந்திரன் என்ற ஆசிரியர் முயற்சித்து வருவதாக அறிய முடிகிறது (இந்த பழிவாங்கலுக்கான காரணங்கள் தேவைப்பட்டால் அடுத்த செய்தியில் மிக தெளிவாக எமது செய்திச் சேவை வழங்கும். அந்த மாணவனும் சக நண்பனும் பாடசாலை விட்டு வெளியே செல்லும்போது, சக நண்பன் விசில் (பாடசாலைக்கு வெளியே) அடித்தான். இதன்போது அந்த மாணவன் “நீ என்னுடன் வரும்போது விசில் அடிக்காதே” என கூறியுள்ளான். இருந்தும் அந்த மாணவன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் விசில் அடித்தான்.
இதன்போது கஜேந்திரன் என்ற ஆசிரியர் விசில் அடிக்காத மாணவனை அழைத்து “ஏன் விசில் அடித்தாய் என கேட்டார்” அதற்கு அந்த மாணவன் “நான் விசில் அடிக்கவில்லை” என கூறினான். மறுபடியும் ஆசிரியர், நீ தான் விசில் அடித்தாய் என கூறியவேளை, அந்த மாணவன் தன்னுடன் வந்த சக நண்பனிடம் இது குறித்து விசாரிக்குமாறு கூறினான்
இதன்போது ஆசிரியர் அந்த மாணவனை அழைத்து யார் விசில் அடித்தது என கேட்டவேளை, அவன் தான் விசில் அடித்ததை ஒத்துக் கொண்டதுடன், நண்பன் விசில் அடிக்க வேண்டாம் என்று கூறியதாகவும் கூறினான்.
இதன்போது குறித்த ஆசிரியர் விசில் அடிக்காத மாணவனை அனுப்பி விட்டு, விசில் அடித்த மாணவனிடம் கடிதம் வழங்குமாறு கோரினார். இதன்போது அந்த மாணவன் “நான் விசில் அடித்தது தவறு. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என எழுதி கடிதத்தை வழங்கினான்.
அந்த கடிதத்தை பறித்து கிழித்து எறிந்த கஜேந்திரன் என்ன ஆசிரியர் கிழித்து எறிந்துவிட்டு, அவன் சொல்லி தான் விசில் அடித்தேன் என எழுதி கொடு என்று மிரட்டினார். அவன் விசில் அடிக்க சொல்லவில்லை பின்னர் ஏன் நான் அவனது பெயரை எழுத வேண்டும் என கூறி அந்த மாணவன் நண்பனது பெயரை எழுதவில்லை. தனக்கு ஏதாவது சிக்கல் வந்தாலும் என்று நினைத்த ஆசிரியர் அடுத்தநாள் அந்த ஆசிரியர் மாணவனை சமாதானப்படுத்தியுள்ளார்.
அந்த மாணவன் மீண்டும் பாடசாலையில் இணைந்த பின்னர், வகுப்பில் யார் கூடவும் பேசக்கூடாது, தனியாக தான் இருக்க வேண்டும் என் கஜேந்திரன் என்ற ஆசிரியர் கட்டுப்பாடு விதித்துள்ளார். அப்படி யாராவது மாணவர்கள் அந்த மாணவனுடன் பேசியதை கண்டால் அவர்களை தனியே அழைத்து மிரட்டுவாராம்.
வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனைக்கு சென்றால் அந்த மாணவனை ஏனைய மாணவர்களுடன் அமர்ந்திருந்து பிரார்த்தனையில் ஈடுபட விடாமல் தனக்கு பக்கத்திலே அமர்த்தியிருப்பாராம். ஏனைய மாணவர்களுக்கு மத்தியில் அவனிடம் ” என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, நான் நினைத்தது தான் நடக்கும் என்று கூறியுள்ளாராம். ஏனைய மாணவர்களை அந்த மாணவனுடன் சேர விடாமல் தடை போடுவாராம். அப்படி யாராவது சேர்ந்து சென்றால் அவர்களை அழைத்து விசாரணை செய்வாராம். அத்துடன் அந்த மாணவனையும் மிரட்டுவாராம். இவ்வாறு அந்த மாணவனின் மனதை நோகடிப்பதாக கஜேந்திரன் என்ற ஆசிரியர் செயற்பட்டு வந்துள்ளார்.
பிழையே செய்யாத அந்த மாணவனை திருத்துவது போல பாசாங்கு செய்து அவனது மனதை புண்படுத்துவதுடன் அநாகரீகமான முறையில் தொடர்ந்தும் நடந்து கொள்கிறார். இவர் கல்வி கற்பிக்க தொடங்கிய காலப்பகுதியில் (2007) இவரிடம் கல்வி கற்ற மாணவியிடம் முறைகேடாக நடந்த காரணத்தால் வெளிமாவட்டத்திற்கு இடமாற்ற தண்டனையில் சென்றுள்ளார். (தேவை ஏற்பட்டால் அடுத்த செய்தியில் அந்த முறைகேடான விடயம் என்ன என்பதையும், இவரது ஏனைய செயற்பாடுகள் குறித்தும் தெளிவாக எமது செய்திச்சேவை வழங்கும்)