கனடாவின் ஒன்ராறியோ மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், அரச காணிகள் மற்றும் கிரீன்பெல்ட் நில மாற்றத்தை அவரது துறை கையாண்டது குறித்து பல குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக எதிர்கட்சிகளின் விமர்சகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களிடமிருந்து பல வாரங்களாக எதிர்கொண்ட நிலையில் தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது ஒன்றாரியோ அரசாங்கத்திற்கும் அதன் முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கும் மிகுந்த சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று அறியப்படுகின்றது
ஒன்ராறியோவின் நீதித்துறை ஆணையர் அமைச்சரின் நடத்தையை விசாரித்து கிளார்க்கை கண்டிக்கும் வகையில் பரிந்துரைத்ததை அடுத்து அமைச்சர் தனது ராஜினாமா பற்றி அறிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், ஒன்றாரியோ மாகாணத்தின் கணக்காய்வுதுறை நாயகம் , வீட்டுவசதி மேம்பாட்டிற்காக எந்தெந்த நிலங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய செயல்முறையானது, பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டக்கூடிய வீடுகள் கட்டும் தொழில் ஈடுபட்டுள்ள ஒரு சிறிய குழுவால் மாகாணத்தின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அது தொடர்பாக அறிவித்திருந்தார்.
இதேவேளை இன்று 4ம் திகதி திங்கட்கிழமை காலை ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்டுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அமைச்சர் கிளார்க், ஒன்ராறியோ மக்களுக்காக “அதிக வீடுகளைக் கட்டுவதற்கான ஆணையை நிறைவேற்ற முயற்சிப்பதாக” குறிப்பிட்டிருந்தார்.
“இந்தத் தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நான் எனது அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியும் என்றும் சரியான செயல்முறையை உருவாக்க முடியும் என்று எனது ஆரம்ப எண்ணம் இருந்தபோதிலும், எனது பதவி மூலம் செய்யப்பட வேண்டிய முக்கியமான வேலைகளில் இருந்து மேலும் கவனச்சிதறலை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை நான் உணர்கிறேன். என்ன நடந்தது என்பதற்கு நான் பொறுப்பேற்க வேண்டும்” என்று அமைச்சர் கிளார்க் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளாரபதவியில் இருந்து தனது ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எவ்வாறாயினும் லீட்ஸ்-கிரென்வில்லே-ஆயிரம் தீவுகள் மற்றும் ரைடோ ஏரிகளுக்கான தொகுதிக்கான மாகாண பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து எனது தொகுதிமக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்.” என்றும் அறிவித்துள்ளார்.