04.09.2023
மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த அன்ரனி சரோன் டயஸ் உயிரியல்,பெளதீகவியல்,இரசாயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 3A தர சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.