பு.கஜிந்தன்
புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மாயம் – வவுனியாவில் அதிர்ச்சி!
வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த சிறுமியின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் வவுனியா நெளுக்குளம் பகுதியைசேர்ந்த சிறுமி ஒருவர் கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் தவறி வீழ்ந்து மரணமடைந்திருந்தார்.
குறித்த சிறுமியின் சடலம் மரணவிசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அவரது வீட்டில் இறுதிச்சடங்குகள் இடம்பெற்று இராசேந்திரங்குளம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடக்கின்ற நிலையில் அவரது சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.