இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்த மனித புதைகுழி அகழ்வு பணிகள் வெள்ளிக்கிழமை (15) இடைநிறுத்தப்பட்டன. இது மீண்டும் அக்டோபர் மூன்றாவது வாரம் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறிதது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மற்றும் தொல்லியல் வல்லுநர் கலாநிதி ராஜ் சோமதேவாவின் பிரத்தியேக தகவல்கள். அங்கு இதுவரை 17 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பான்மையானவை விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளுடையது என்று கருதப்படுகிறது.