(மன்னார் நிருபர்)
(21-09-2023)
தியாக தீபம் திலீபனின் 36 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று வரும் நிலையில் 7 வது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை (21) மாலை குறித்த ஊர்திப் பவனி மன்னார் நகரை வந்தடைந்தது.
-இன்று வியாழக்கிழமை(21) மாலை 5.50 மணி அளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி வந்தடைந்தது.
பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தியாக தீபம் திலீபனின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பள்ளிமுனை,பனங்கட்டுக்கொட்டு,சாந்திபுரம்,எழுத்தூர் மற்றும் தாழ்வுபாடு ஆகிய கிராமங்களை நோக்கி மக்களின் அஞ்சலிக்காக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவனி அசன்றமை குறிப்பிடத்தக்கது.