22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார்.
கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையை ஆற்றிய பின்னர் வெற்றியீட்டும் இளந்தாரகைகளுக்கு பட்டங்களையும் பரிசுகளையும் இலங்கையின் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் வழங்கவுள்ளார்..
இங்கே காணப்படும் படங்கள் நேற்று ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் அவரை வரவேற்கச் சென்ற திருமதி சகிகலா நரேந்திரா மற்றும் உதயன் லோகேந்திரலிங்கம் உட்பட நண்பர்கள் நண்பிகள் நிற்பதைக் காணலாம்.
– படங்களும் செய்தியும்: சத்தியன்-