கதிரோட்டம் 18-09-2020
உலகில் அனைத்து நாடுகளிலும் தேர்தல்கள் இடம்பெறுகின்றன. அந்தத் தேர்தல்களில் மக்கள் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுத்து ஆட்சிpயை அவர்களிடம் ஒப்படைக்கின்றார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மக்களுக்காக தங்களை தியாகம் செய்ய வேண்டிய பொறுப்புக்கள் கொண்டவர்கள் என்பதை மறந்து தங்கள் தேசத்தின் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றார்கள்.
இவற்றுக்கு பல காரணங்கள் உள்ளன. பல வேறுபாடுகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தங்களை வகைப்படுத்துகின்றார்கள். இன ரீதி;யான வேறுபாடுகள், மொழி ரீதியான வேறுபாடுகள், வர்க்க ரீதியான வேறுபாடுகள் என தங்கள் முன்னாள் தெரியும் யதார்த்தங்களை வைத்து அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றார்கள்.
பல்வேறு தேசிய இனங்கள் வாழும் சோவியத் யூனியனில் அவை அனைத்தும் சம உரிமைகளோடு நிம்மதியாக வாழும் வழிகளை மார்க்ஸ் லெனின் போன்ற சிந்தனையாளர்கள் வகுத்தார்கள். ஆனால் சோவியத் யூனியனின் சரிவிற்கு பின்னர் அவர்களின் சித்தாந்தங்கள் மற்றும் வழி முறைகள் ஆகியன வேறு நாடுகளுக்கு பரவிட முடியாமல் மறைக்கப்படுகின்றன. சொந்த நாட்டிலேயே சித்தாங்களை மறுதலிக்கும் தலைவர்கள் அங்கு ஆட்சியில் அமர்ந்திருப்பதே அதற்குக் காரணம்.
இவ்வார கதிரோட்டத்தில் இவ்வாறான விடயத்தை நாம் கையில் எடுத்ததற்கு பல காரணங்கள் உள்ளன. எமது தாயகத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆட்சியாளர்களின் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதும் அதற்கு அடுத்ததாக வர்க்க வேறுபாட்டை கடைப்பிடிக்கும் போக்கு காரணமாகவும் அங்கு இனப்பிரச்சனை என்பது தீர்க்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. இதன் காரணமாக அங்கு ஆயுதப் போராட்டம் இடம்பெறவே அதன் காரணமாக பெரும்பான்மை அரசின் எதிர்நடவடிக்கையின் விளைவாக இனப் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து எம் இனம் சார்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட துன்பியல் படலங்களும் அரங்கேறின. ஆனால் நாம் முன்னர் குறிப்பிட்ட ஆட்சியாளர்கள் என்ற வர்க்க இணக்கப்பாடு காரணமாக பல நாடுகளிலிருந்து ஆட்சியாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட படைகள் எமது தாயக மண்ணில் இனப்படுகொலைகளை நடத்தி நிற்க, அதனைத் தொடர்ந்து மக்கள், தாக்குதல்களின் கோரப்பிடிக்குள்ளாகி காணாமல் ஆக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் எங்குள்ளார்கள் என்பதே அறிய முடியாமல் தவிக்கும் நிலையில் அவர்களின் நெருங்கிய உறவுகள் காலத்தைக் கழிக்கின்றார்கள்.
அவ்வாறு காணமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களைப் பெற்றவர்கள், உற்றவர்கள் என நூற்றுக்கணக்காக வீதிகளில் போராடி வருகின்ற இந்த நாட்களில் அவர்களுக்காக தங்களை வருத்திக் கொண்ட கனடிய உறவுகள் ஏழு பேர் நீண்ட நடையில் தங்கள் அர்ப்பணித்தார்கள்ஃ
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தேசத்தின் பிரதமர் அவர்களின் பிரதிநிதியிடம் இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கு நீதி கேட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்கள்.
மேற்படி நடைப் போராட்டத்தின் தாக்கம், தற்போது எமது மக்களின் மனங்களில் சற்று போராடும் சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இவ்வாறு பார்க்கும் போது, மக்களைப் பாதுகாக்க வேண்டிய அலலது அவர்களுக்காக தியாகங்களைப் புரிய வேண்டிய அரசியல் தலைவர்களாலும் அரசாங்கங்களாலுமே இவ்வாறான இனப்படுகொலைகளும் காணமலாக்கப்படும் கொரூரங்களும் இடம்பெறுகின்றன என்றால் அது மிகையாகாது. உலகின் அனைத்து நாடுகளிலும் ஆட்சி பீடங்களில் உள்ளவர்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன என்றால் அதுதான் உண்மை என்று உரத்துச் சத்திமிடலாம்.
இதைத் தவிர இன்னோர் வகையான உறவாடும் தன்மை நாம் மேற்கூறிய பல நாடுகளின் ஆட்சியாளர்கள் மத்தியில் தாம் காண்பதாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் அங்கு தனது உரையில் தெரிவித்துள்ளதை விட இலங்கையில் புதிய ராஜபக்ச அரசாங்கத்தின்கீழ் மனித உரிமை நிலவரம் மோசமானதாக உள்ளதாக தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பான்மை இனவாத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையுடன் தொடர்ந்தும் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என மேற்குஉலக மற்றும்வடஅமெரிக்கா நாடுகள் சிந்திக்கின்றன என சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை யுத்தகுற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தமை குறித்து கண்டிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பார்க்கும் போது தற்போது இலங்கையில் யுத்தக்குற்றங்களுக்கு பொறுப்புக்களைக் கூறவேண்டியவர்களோ ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்து ஆட்சித் தவைர்களோடு கைகுலுக்குவதும் கொண்டாடுவதுமாக இருக்க, அரியாசணங்களே அவமானத்தினால் தவைகுனிவது போன்றே எமக்குத் தெரிகின்றது