கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வைபவம் எதிர்வரும் 28-10-2023 அன்று கனடாவின் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் கனடா வாழ் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கௌரவத்தைப் பெறவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையில் அதன் நிர்வாக சபை செயற்பட்டு வருகின்றது.