நடராசா லோகதயாளன்
ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் அதனை ஏன் கைவிட்டோம் என எண்ணி இன்று வருந்துவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாவின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற “ஜனாவின் வாக்குமூலம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
இலங்கையில் இன்று எங்கு பார்த்தாலும் புத்த பிக்குகளின் நாட்டாமைத்தனத்தையும், முப்படைகள் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் அடாவடித்தனத்தையுமே காணக்கூடியதாக உள்ளது.
இதனையெல்லாம் பார்க்கும் போது எமக்கு ஏன் ஆயுதப் போராட்டத்தினைக் கைவிட்டோம் என வருத்தமாக உள்ளது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணமும் தோன்றுகின்றது என்றார்