பு.கஜிந்தன்
வடமாகாணத்தில் மாணவர்கள் மட்டத்தில் இருந்து கிரிக்கெட் சர்வதேசமட்டத்திற்கு உயர்த்துவதே இலக்கு என யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் பயிற்சி நிலைய தலைவர் டாக்டர் ஸ்ரீதரன் கணேஷ்சமுர்த்தி தெரிவித்தார்.
கிரிக்கெட் போட்டி தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்றுமாலை தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இப்போட்டியானது எதிர்வரும் 06,07,08 ஆகிய நாட்களில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யிலும், வவுனியாவில் நோத் ஸ்டார் செற்றிலும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .
இதற்கு தனியார் கல்வி நிறுவனம், பாடசாலை மாணவர்கள் மாவட்ட சங்கங்கள் ஊடாக பெருமளவிலான ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். இக் கிரிக்கெட் போட்டியில் நூறுக்கும் நூற்றி ஐம்பது இடைப்பட்ட மாணவர்களாக தெரிவு செய்யப்படவிக்கின்றனர். மேலும் அடிமட்டத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கி வருகின்றோம்.
மாவட்ட கிரிக்கெட் சங்கங்கள் ஊடாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றது இப்பயிற்சியானது காலை 09 மணிக்கு ஆரம்பமாகும்
இவ் பயிற்சியினை ஆரம்பித்துவைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் பயிற்சி நிலைய தலைமை அதிகாரி சமிந்தவாஷ் கலந்துகொள்ளார் -என்றார்.