(மன்னார் நிருபர்)
(06-10-2023)
உலக குடியிருப்பு வாரம் கடந்த 02 ஆம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நெகிழ்வான நகர்ப்புற பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பங்களிப்புடன் பல்வேறு செயல்பாடுகளை அமுல்படுத்தி இத்தினம் கொண்டாடப்படுகிறது.
மன்னார் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 02 ஆம் திகதி திங்கள் காலை தேசிய கொடி ஏற்றி உலக குடியிருப்பு வார நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் மன்னார் ஜிம் பிறவுண் இந்தியன் வீட்டுத்திட்டம் மற்றும் பற்றிமா நகர் 1 மற்றும் பற்றிமா நகர் 11 இந்தியன் வீட்டுத் திட்டங்களில் சிரமதானம், மரநடுகை மற்றும் போதைவஸ்து விழிப்புணர்வு கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தங்களது பிள்ளைகளுக்காக வீடமைத்த பெற்றோர் இன்று வயோதிப இல்லங்களில் வசித்து வருகிறார்கள்.
மன்னார் பட்டித்தோட்டம் வயோதிப இல்லத்தில் வாழும் மூத்தோரை சந்தித்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தி அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் நிகழ்வும் இவ்வாரத்தில் சிறப்புற நிகழ்ந்தது.
தொடர்ந்து வரும் நாட்களில் கடந்த 2021 மற்றும் 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஒபட்ட கியக் ரட்டட்ட ஹெட்டக்’ மானிய வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான மிகுதி கொடுப்பனவுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.