பு.கஜிந்தன்
இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
நிகழ்வில் இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத் தலவைர் சிவஞானம், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராசா மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.