நேற்றையதினம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் பகுதியில் 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.