கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று ஈற்றோபிக்கோ நகரில் கனடா பாரதி கலா மன்றமும் ‘வித்யா பாரதி- கனடா அமைப்பும் இணைந்து நடத்திய ‘வித்யா பாரதி கலைச்சேவை விருது விழா சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் கனடாவில் கலைச்சேவை ஆற்றியவரும் இசையாசிரியர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் போன்ற பலர் கௌரவிக்கப்பெற்றனர்.
அவர்களின் இளம் கலைச் சேவை விருது திருமதி நிவேதா இராமலிங்கம் என்னும் நடன ஆசிரியைக்கு வழங்கப்பெற்றது. இந்த விருதினை தொழிலதிபர் கணேசர் சுகுமார் அவர்கள் தனது மறைந்த துணைவியார் ஷீலா சுகுமார் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருக்கு வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்றும் கலைஞர்களான திருமதி தனதேவி மித்ரதேவா திருமதி லதா பதா ஆகியோர்க்கும் ‘வித்யா பாரதி- கலைச்சேவை விருதுகள் வழங்கப்பெற்றன.
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.