ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றி விழாவாகத் திகழ்ந்தது
கடந்த சனிக்கிழமை -21-10-2023 அன்று Whitby நகரில் உள்ள அழகிய மண்டபம் ஒன்றில் ஸ்காபுறோ லத்திக்கா கோல்ட் ஹவுஸ் நகை மாளிகையினர் நடத்திய ‘இசை வெள்ளம்’ மாபெரும் இசை நிகழ்ச்சி வெற்றி விழாவாகத் திகழ்ந்து இசை ரசிகர்களின் பாராட்டுக்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தேடிக்கொடுத்தது.
மேற்படி .இசை நிகழ்ச்சியை நடத்த லத்திகா கோல்ட் ஹவுஸ் நிறுவனத்தாருக்கு ‘தமிழோசை’ -ஶ்ரீகாந்தா அவர்களும் மிகுந்த பக்க பலமாக இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் உன்னிமேனன். பாடகிகள் சைந்தவி. ரம்யா நம்பீசன் மற்றும் சுப்பர் சிங்கர் பாடக பாடகிகள் என பலரும் மேடையில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்தனர். அ த்துடன் கனடா வாழ் இளைய தலைமுறை பாடக பாடகிகளும் அங்கு தங்கள் திறமையை நிரூபிக்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பெற்றன.
இசை வெள்ளம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவென தமிழகத்தின் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் விஜே மற்றும் கிகி; ஆகியோர் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தனர். இசை வெள்ளம் நிகழ்ச்சியின்; ஆரம்ப நிகழ்வுகளை கனடா வாழ் அறிவிப்பாளர் ரஞ்சித் தொகுத்து வழங்கி தொடர்ந்து பிரதான அறிவிப்பாளர்களை மேடைக்கு அழைத்தார்.
மண்டபம் நிறைந்த விழாவாக நடைபெற்ற இந்த இசை வெள்ளம் நிகழ்ச்சிக்கு கனடாஉ தயன் பத்திரிகையும் அச்சு ஊடக அணுசரனை வழங்கியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
விழாவின் இறுதியில் லத்திக்கா கோல்ட் ஹவுஸ் சார்பில் சசிகுமார்- பிரியா தம்பதி மேடையில் நன்றியைத் தெரிவித்தனர்..
புகைப்படங்களுக்கு நன்றி;- செய்தி.கொம் குணா மற்றும் ரவி அச்சுதன்