இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அ.சுபஸ்திகா தெரிவித்தார்.
சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் புதிய கடற்தொழில் திருத்த முன்மொழிவின் சாதக பாதகங்கள் தொடர்பில் வடமாகாண மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.