இலங்கையில் அரச ஒலிபரப்பு மற்றும் ஒளி பரப்பு நிறுவனங்களில் பணியாற்றி அவை மூலம் பெற்ற அனுபவம் மற்றும் பயிற்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக கனடாவில் இயங்கிவரும் தொலைகாட்சி மற்றும் வானொலி நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வெற்றி கண்ட பி. விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிவெளியிட்டுள்ள ‘நினைவு நல்லது’ என்னும் அதிக பக்கங்கள் கொண்ட நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 04-11-2023 அன்று கனடாவில் நடைபெறவுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழா பற்றிய செய்தியும் படங்களும் கனடா உதயன் பத்திரிகையின் அச்சுப் பதிப்’பிலும் இணையப் பதிப்பிலும் பிரசுரமாகி இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஸ்காபுறோவில் நடைபெறும் வெளியீட்டு விழா ப்றறிய விபரங்களை இங்கு காணப்படும் விளம்பர அறிவித்தலில் பார்க்கவும்.