கனடாவில் கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்தவண்ணம் கலை இலக்கிய மற்றும் சமயம் சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக ஆற்றி வந்த கவிநாயகர் கந்தவனம் அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் அகவை 90 ஐ அடைந்தார்.
உலகெங்கும் வாழும் கலை இலக்கியவாதிகளால் மதிக்கபபெறும் கவிநாயகரது 90வது அகவைத் திருநாளைக் அவரது குடும்பத்தினரும் கலை இலக்கிய நண்பர்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கனடா கவிஞர் கழகமும் இணைய வழி ஊடாக அவரைப் போற்றிப் பாடும் ‘கவியரங்கம்’ ஒன்றை நடத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.