தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் அவர்களது யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ”வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு தரப்பு, வைத்தியசாலை ஒன்றுக்கு தொடர்ந்து உதவி செய்வதாக என்னிடம் கூறினார்கள். ஆகையால் நான் பணிப்பாளர் சத்தியமூர்த்தியிடம் இது குறித்து தொலைபேயில் தெரிவித்து, ஒரு வைத்தியசாலையை அவர்களுக்கு இனங்காட்டுமாறு கூறினேன். அவர் தான் கூட்டத்தில் இருப்பதாகவும், பின்னர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்வதாகவும் கூறினார் ஆனால் அழைப்பு மேற்கொள்ளவில்லை. இதனால் வடக்கு பகுதியில் உள்ள ஒரு வைத்தியசாலைக்கு வந்த நிதி வேறு மாகாணத்திற்கு சென்று விட்டது”. என்றார்
அத்துடன் யாழ்ப்பாண தொழிலதிபர் தியாகேந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா, மலையகத்தை சேர்ந்த அஷானி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியில் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு மில்லியன் பல மில்லியன் கணக்கான உதவி வழங்கியமை தொடர்டபாகவும் விளக்கமளித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் ‘யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் இயங்கி வந்த சுபாஸ் ஹோட்டல் ஆரம்பத்தில் ஓலை கூரையுடன் காணப்பட்டது. அதற்கு மில்லியன் கணக்கிலான நிதி வழங்கி புனரமைப்பு செய்தேன். இப்போது அந்த ஹோட்டலில் கிளினிக் நடைபெறுவதில்லை. அது குத்தகைக்கு எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. குத்தகைக்கு எடுத்த விடயம் எனக்கு கூறப்படாமல் அங்கே மில்லியன் கணக்கிலான நிதியை செலவு செய்ய வைத்துவிட்டார்கள்” என்றும்.யாழ்ப்பாண தொழிலதிபர் தியாகேந்திரன் அவர்கள் குற்றஞசாட்டினார்