வடக்கு கிழக்கு தமிழர்களின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் தோட்டம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வும் நாளை புதன்கிழமை எட்டாம் திகதி யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாக உள்ளதாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார்.
நேற்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளருக்கு தெளிவூட்டும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு 100 நாள் செயல்முறையின் ஓராம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.
ஆகவே குறித்த கண்காட்சி மக்களின் வரலாற்று தெளிவூட்டல்களுடன் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் இணைபாட்சி தொடர்பான கண்காட்சியில் வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் அரசியல் கட்சியின் தலைவர்கள் ஆய்வாளர்கள் கல்விமான்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.