பு.கஜிந்தன்
கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்தோர்கள் கௌரவிப்பு உரும்பிராயில் இடம் பெற்றது.
கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான அ.சிவபாலசுந்தரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மூத்தோர்களை கௌரவித்தார்.
இந் நிகழ்வில் தேசோதய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.ரமணன், கிராமத்தில் வாழும் மூத்தோர்கள் , தேசோதய அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.