பு.கஜிந்தன்
தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்து 33 ஆண்டுகளின் பின்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய வடமராட்சி கிழக்கு, குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை பருத்தித்துறை நீதிவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
போர் காரணமாக குடத்தனை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா நாகேஸ்வரி (வயது-58), அவரது மகளான சின்னராஜா சுதர்சினி (வயது-42) மகனான சின்ன ராஜா சுதாகரன் (வயது-39) ஆகியோர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்குச் சென்றிருந்தனர்.
தற்போது படகு மூலமாக தாயகம் திரும்பி குடத்தனை பகுதியில் உள்ள உறவினர் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோது பருத்தித்துறை பொலிஸாரால் கடந்த மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பருத்தித் துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, அவர்களின் விளக்கமறியலை நீதி மன்றம் நீடித்தது.