‘தலைவர் 170’ படத்தின் மொத்த படப்பிடிப்பு இன்னுன் சில தினங்களில் முடிய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’ படத்தின் இமாலய வெற்றிக்கு சமமாக தனது அடுத்த படத்தையும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஜெயிலர்’ படம் முழுக்க முழுக்க மாஸான கமர்ஷியல் கலவையாக வெளியான நிலையில் ‘தலைவர் 170’ அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குநர் ஞானவேல். இந்த படபிடிப்பு பணிகள் முடிந்த பின்னர், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் அடுத்த கட்ட படபிடிப்பு பணிகள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பு இன்னுன் சில தினங்களில் முடிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிள்ளது.