‘Heritage Beyond Boarders’பல்கலாச்சார அமைப்பு ரவி அச்சுதன் அவர்களுக்கு
‘கனடிய தமிழ் திரைப்படத்துறை முன்னோடி’ விருது வழங்கிக் கௌரவித்தது
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் Heritage Beyond Boarders’ என்னும் பல்கலாச்சார அமைப்பு 18-11-2023 சனிக்கிழமையன்று ரொறன்ரோ மாநகரில் நடத்திய 16வது ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொலைகாட்சி நிறுவனங்களின் உரிமையாளர் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தார. கனடாவில் உள்ள பல்லின மக்கள் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் என பலவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் சாதனையாளர்கள் அங்கு விருதுகள் வழங்கப்பெற்றார்கள்.
கனடாவின் மத்திய அரசின் முன்னாள் குடிவுரவு மற்றும் பிரஜாஉரிமைகள் அமைச்சர் ஜோ வொல்பே உட்பட பல பிரமுகர்கள் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்கள். அத்துடன் ஒன்றாரியோ மாகாணத்தின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் எழுத்தாளருமான ரொனி ரூபட் அவர்களும் சிறப்புத் தொகுப்பாளராக விழாவிற்கு மேன்மையினைத் தந்தார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விருதுகள் வழங்கும் விழாவில் கனடிய தமிழ்ச் சமூகத்தில் கலை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றுகின்றவர்களிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற ஒருவராக திரைப்பட ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளரும் சிறந்த புகைப்படக் கலைஞர் நடிகருமான ரவி அச்சுதன் அவர்களுக்கு ‘கனடிய தமிழ்த் திரைப்படத்துறை முன்னோடி’ என்னும் விருது வழங்கப்பெற்றது.
இங்கே காணப்படும் படங்களில் ரவி அச்சுதன் அவர்களின் துணைவியார் உட்பட நண்பர்கள் நிற்பதைக் காணலாம். (படங்கள் சத்தியன்)