வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்பெற்ற பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கிளிநொச்சி மக்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்கியுள்ளனர்
மேலும், வடக்கு – கிழக்கில் இன்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறை மக்களும் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவை வழங்கியுள்ளனர்
இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது . இந்த ஹர்த்தால் பூரண வெற்றிபெற்றமை குறித்து ஜனாதிபதி தனது அமைச்சர்களில் சிலரை நேரடியாக தனது அலுவலகத்திற்கு அழைத்து கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் தினசரிப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் நட்பு ரீதியாக எம்மோடு பகிர்ந்து கொண்டார்.