மன்னார் நிருபர்
06.12.2023
இலங்கை மத்திய வங்கியின் நிதி அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாட்டில் உற்பத்தி செலவுகள் தொடர்பான முகாமைத்துவம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான பயிற்சிப்பட்டறை மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் 06-12-2023 புதன்கிழமை (6) இடம் பெற்றது.
பொருளாதார நெருக்கடி மத்தியில் சிறு தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் உற்பத்தி தொடர்பான தெளிவு படுத்தலை வழங்கும் முகமாக குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் விசேட அழைப்பின் பெயரில் வடமாகாண மத்திய வங்கியின் கிளை உதவி முகாமையாளர் திருமதி.மாலினி அச்சுதன் மற்றும் இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் மன்னார் மாவட்ட பணிப்பாளர் ஜே.எம்.ஏ. லெம்பேட், மெசிடோ நிறுவனத்தின் கள ஒருங்கிணைப்பாளர் விவேகி மற்றும் விரிவுரையாளர் எம்.ஏ.பெளர்சாத் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .
மன்னார் மாவட்ட பிரதேச செயலக பிரிவை சேர்ந்த மீன்பிடி,விவசாயம் ,கைவினை பொருள் உற்பத்தி உள்ளடங்களாக பல்வேறு சுய தொழில்களில் ஈடுபடும் 30 க்கும் அதிகமான பெண் தொழில் முயற்சியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது