வட மாகாண பண்பாட்டு விழா 06-12-2023 அன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் குறித்த விழா ஆரம்பமானது.
கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி பேரணி ஆரம்பமானது. தொடர்ந்து காக்கா கடை சந்தியில் பண்பாடு, கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணி ஆம்பமாகி விழா மண்டபம் வரை சென்றது.
குறித்த பண்பாட்டு பேரணியை மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வரவேற்றனர்.
இதன்போது, தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி ஆரம்ப பேரணி இடம்பெற்றது.
தொடர்ந்து பண்பாட்டு அருங்காட்சியகம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரால் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது, ஓவியங்கள், பாரம்பரிய பயன்பாட்டு பொருட்கள், புத்தகங்கள், ஒளி ஒலி நாடாக்கள் என பல அம்சங்கள் கண்காட்சி கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் இடம்பெற்றது.
இன்றும் நாளையும் குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளதுடன், மாணவர்கள், பெற்றோர் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இதேவேளை அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.