பு.கஜிந்தன்
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்பாளின் கும்பாபி ஷேக பெருவிழா விற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இவ்வாலயத்தில் யந்திர பூஜை, பந்தற்கால் நாடும் கிரியைகள் 07-12-2023 அன்றுஇடம்பெற்று, 48 நாட்கள் மண்டாபிலாஷக கிரியைகள் இடம்பெற்று, எதிர்வரும் 22.01.2024 அன்றும், மறுநாள் 23.01.2024 வரை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வும் தைத்திரு நாளுக்கான சமய நிகழ்வும் இடம்பெற்று 24.01.2024 அன்று மஹாகும்பாபிஷேக பெரும்விழா இடம்பெறவுள்ளது.
இனிதே கும்பாபிஷேக பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டலுக்கான கர்மாகிரியைகள் இடம் பெற்றன
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய அறங்காவலர்கள் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.